2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

பல்கலைக்கழக விண்ணப்பம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

J.A. George   / 2021 ஜூன் 17 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதன் பின்னரும், 2021ஆம் ஆண்டு பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிப்பதற்கு,  சந்தர்ப்பம் வழங்குவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

பல்கலைக்கழக அனுமதிக்காக  இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை நள்ளிரவுடன்  (18) நிறைவடைகின்றது.

அத்துடன், இதுவரை ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இதுவரை விண்ணப்பிக்க முடியாத விண்ணப்பதாரர்களுக்கு, பயணக் கட்டுப்பாடு தளர்ப்பட்டதன் பின்னர் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .