Nirosh / 2021 ஓகஸ்ட் 03 , மு.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றி, அரசாங்க அலுவலகங்களைத் திறப்பதில் எந்தவிதமான தவறுகளும் இல்லை என முன்னாள் ஜனாதிபதியும்,சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன எம்.பி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரிவித்துள்ள மைத்திரிபால சிறிசேன எம்.பி, இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் நிலைகளில், உலகின் ஏனைய நாடுகள் இந்த நிலைமையை எவ்வாறு கையாண்டுள்ளன என்பதைப் பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
நாடு முகங்கொடுக்கும் ஆபத்தான நிலையை உணர்ந்துக்கொள்ளும் அதேவேளை, நாட்டையும் தொடர்ந்து மூடி வைத்திருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றி அரசாங்க அலுவலகங்களைத் திறப்பதில் எந்தவிதமான தவறும் கிடையாது. அரசாங்க அலுவலகங்களை தொடர்ந்து மூடியிருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago