2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

’மதுபானங்களால் நாளொன்றுக்கு 60 பேர் உயிரிழப்பு’

Nirosh   / 2021 ஜூன் 16 , பி.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்லைன் ஊடாக மதுபான போத்தல்களை வீடுகளுக்கு விநியோகிக்கும் செயற்பாடுகளுக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்ப்புத் தெரிவத்துள்ளது.

கொரோனா வைரஸால் நாளொன்றுக்கு 60 பேர் உயிரிழக்கின்ற நிலையில், நாளொன்றுக்கு மதுபானங்களால் மாத்திரம் 63 பேர் உயிரிழப்பதாகவும் அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் நிலைமைகளால் நாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருள்கள், மருந்துகளை வீடுகளுக்கு விநியோகிக்க இதுவரையில் எந்தவிதமானத் திட்டங்களும் இல்லை என்பதை சுட்டிக்காட்டும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், ஒன்லைனூடாக மதுபானங்களை வீடுகளுக்கு விநியோகிக்கும் செயற்பாடுகள் வெட்கத்துக்குரியதெனவும் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .