Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 29 , மு.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
தலவாக்கலை- கட்டுக்கலை தோட்டத்தில் இடம்பெற்ற கைகலப்பில் பாதிக்கப்பட்ட, இரண்டு பெண் தொழிலாளிகள் உள்ளிட்ட நால்வர் வைத்திசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொழிலாளர்களுக்கும், தோட்ட உதவி அதிகாரி மற்றும் உதவி வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு இடையே நேற்று (28) வாய்த்தகர்க்கம் ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து ஏற்பட்ட கைகலப்பு காரணமாகவே, இந்த நால்வரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தோட்ட உத்தியோகஸ்தர்கள் இருவரும் நுவரெலியா வைத்தியசாலையிலும், பெண் தொழிலாளிகள் இருவரும் லிந்துலை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெளியாட்களை கொண்டுவந்து, கொழுந்து பறிக்க செய்யும் கட்டுக்கலை தோட்ட நிர்வாகம், அவர்களுக்கு 1,000 ரூபாய் சம்பளம் வழங்குவதாகவும் அதேதோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஒரு கிலோகிராம் கொழுந்துக்கு 40 ரூபாய் வழங்கி அன்றாடம் பறிக்கும் கொழுந்தின் நிறைக்கு ஏற்பவே சம்பளம் வழங்குவதாகவும் தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
நாளொன்று 19 கிலோகிராம் தேயிலைக் கொழுந்து பறித்தாலும் 1,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதில்லை என அத்தோட்ட தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுக்கின்றனர். ஆண் தொழிலாளர்கள் 8 மணித்தியாலங்கள் வேலை செய்ய வேண்டும் என தோட்ட நிர்வாகத்தினர் கெடுபிடி விதிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான பல பிரச்சினைகள் தொடர்பாக தோட்ட தொழிலாளர்களுக்கும் தோட்ட நிர்வாகத்துக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கமே கைகலப்பாக மாறிவிட்டது.
இதனை கண்டித்து, தொழிலாளர்கள் நேற்று (28) வேலை நிறுத்தத்தில் குதித்தனர். அத்துடன் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
28 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago