2021 ஒக்டோபர் 20, புதன்கிழமை

பொலன்னறுவையில் குடிநீர் இல்லை

Freelancer   / 2021 செப்டெம்பர் 18 , பி.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள 6 பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 30,000 க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள், தற்போது பவுசர்களால் வழங்கப்படும் குடிநீரையே பயன்படுத்துகின்றனர் என மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவு கூறுகிறது.

அந்த வகையில், வெலிகந்த, திம்புலாகல, ஹிங்குரகொட, தமன்கடுவ, லங்காபுர மற்றும் மெதிரிகிரிய பிரதேச செயலகங்களே குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன.

மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவின் உதவி இயக்குனர் உபுல் நாணயக்கார இன்று (18) இதை தெரிவித்தார்.

அவர்களில் பெரும்பாலோர் வெலிகந்த பிரதேச செயலகத்தைச் சேர்ந்தவர்களாவர். அங்கு 11 கிராம அலுவலர் பிரிவுகளில் வசிக்கும் 4,659 குடும்பங்களைச் சேர்ந்த 14,700 நபர்கள் குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X