2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

Freelancer   / 2021 ஒக்டோபர் 17 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகாண போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதால், எதிர்வரும் வியாழக்கிழமை (21) முதல் ரயில் சேவைகள் ஆரம்பிக்கும் என்றும் அன்றைய தினத்திலிருந்து 128 முதல் 130 சேவைகள் தினமும் இடம்பெறும் என்றும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாகாணத்துக்கு உள்ளே மற்றும் மாகாணங்களுக்கு இடையேயான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்த திணைக்கள அதிகாரியொருவர், கண்டி, மாத்தறை, காலி, பெலியத்த மற்றும் சிலாபம் ரயில் நிலையங்களிலிருந்து ரயில் சேவைகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்தார்.

கண்டியிலிருந்து பயணிக்கும் ரயிலை ரம்புக்கனை வரை மெதுவாக இயக்கி, ரம்புக்கனையிலிருந்து தெமட்டகொட வரை தொடர்ச்சியாக இயக்குவற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

இதனால், பயணிகள் தேவையில்லாமல் ரயிலில் ஏறுவதைத் தடுக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .