2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

’சிலிண்டர்களை பயன்படுத்துவதா? இல்லையா?’

Nirosh   / 2021 நவம்பர் 29 , பி.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தொடர்ந்து வெடிக்கின்றன. சிலிண்டர்களை மக்கள் பயன்படுத்த வேண்டுமா? இல்லையா? என்பதை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் சபையில் கேள்வி எழுப்பினார்.

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய வேலுகுமார் எம்.பி, சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இன்று(29) காலை சபையில் உரையாற்றிய இராஜாங்க  அமைச்சர் லசந்த அழகியவன்ன, அது தொடர்பான பரிசோதனை அறிக்கை சபைப்படுத்துவதாக கூறியிருந்தார். எனினும் இதுவரையில் அதனை அவர் சபைப்படுத்தவில்லை. ஏன் அந்த அறிக்கையை அவர் மறைக்கிறார்? எனவும் வினவினார்.

தற்போது ஹட்டன் நகரிலும் சமையல் எரிவாயு வெடித்து சிதறியுள்ளது. சமையில் எரிவாயு சிலிண்டர்களை மக்கள் பயன்படுத்த வேண்டுமா? இல்லையா? என்பதை அரசாங்கத்திலிருக்கும் பொறுப்பானவர்கள் கூற வேண்டும் என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .