2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

சோமவன்ஸ அமரசிங்ஹ தலைமையிலான ஜே.வி. பி குழு யாழ் பயணம்

Super User   / 2010 மார்ச் 16 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 21ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்ஹ தலைமையிலான குழுவினர் யாழ் குடாநாட்டிற்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளனர்.

இவர்கள் எதிர்வரும் 21ஆம் திகதி யாழ் உடுப்பிட்டி வல்வெட்டித்துறைப் பிரதேசத்தில் ஜனநாயக தேசிய முன்னணி சார்பில்,  மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் தேர்தல் அலுவலகமொன்றை திறந்து வைக்கவுள்ளனர்.

அத்துடன், இவர்கள் யாழ் குடாநாட்டில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளிலும் ஈடுபடவிருப்பதாகவும் யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தக் குழுவில் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .