2022 ஜூலை 02, சனிக்கிழமை

அதிகளவு நேரம் மின்வெட்டு

Freelancer   / 2022 மே 14 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் இன்று ஐந்து மணித்தியால மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  

எவ்வாறாயினும், நாளை  வெசாக்  தினத்தை முன்னிட்டு மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

அத்துடன், ரமழான் மற்றும் பெரிய வெள்ளி போன்ற முக்கியமான சமய நாட்களிலும் மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவில்லை என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.  

மேலும், கடந்த 3 நாட்களாக ஐந்து மணி நேர மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்பட்டதுடன், இன்றும் அதேகாலப் பகுதிக்கு மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.  

அத்துடன், கடந்த மூன்று நாட்களாக அனல் மின் உற்பத்தி நிலையத்தில் மின்னுற்பத்தி மேற்கொள்ளப்படாததன் காரணமாக மின் விநியோகத் தடைக்கான காலப்பகுதி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .