2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

‘வீரசேகவரின் மனைவியால் முடியுமா?’

Nirosh   / 2021 ஓகஸ்ட் 06 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பியூமி ஹன்சமாலிக்கு ஆடைகளை வழங்கிய அமைச்சர் சரத் வீரசேகர, கைது செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கும் ஆடைகளை வழங்குவரா? என வினவிய எதிர்க்கட்சி எம்.பி நளீன் பண்டார, 48 மணித்தியாலங்கள் ஒரே ஆடையை உடுத்திக்கொண்டு சரத் வீரசேகரவின் மனைவியால் இருக்க முடியுமா எனவும் வினவார்.

பாராளுமன்றத்தின் நேற்றைய (05) அமர்வில் கலந்துக்கொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர்,  ஆசிரியர்களை நாசமாய் போனவர்கள் என்று திட்டும் அமைச்சர்களே அரசாங்கத்தில் இருக்கிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் மாற்று ஆடைகள் இன்றி இருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.

பியூமி ஹன்சமாலியை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்துக்கு அழைத்துச் செல்லும்போது அவருக்கு ஆடைகளை வழங்கிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, இப்போது ஆசிரியர்களுக்கும் ஆடைகளை வழங்குவாரா? ஆசிரியர்களுக்கு மாற்றுவதற்கு உடைகள் இல்லை.

இதுபோல ஒரே ஆடையை அணிந்துக்கொண்டு இரண்டு நாட்களுக்கு சரத் வீரசேகவரின் மனைவிக்கு அல்லது பொலிஸ்மா அதிபரின் மனைவிக்கு, தேசபந்து தென்னகோனின் மனைவிக்கு இருக்க முடியுமா? எனவும் வினவினார்.

கைது செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மாற்று ஆடைகளை வழங்குவதற்காகவே நாம் இன்று (05) அங்கு சென்றிருந்தோம். ஆனால் எங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .