2021 டிசெம்பர் 04, சனிக்கிழமை

குற்றவாளிக்கு கீழான செயலணி கேலிக்கூத்தானது

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 28 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


கலகொடஅத்தே ஞானசார தேரர், நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட ஒரு குற்றவாளி ஆவார் எனத் தெரிவித்த அநுராதபுர மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் தலைவர், ஏ.ஜி.நளீர் அஹமட், இது சட்டத்தின் ஆட்சியை அவமதிக்கும் செயலாகும் எனத் தெரிவித்துள்ளார்.

வெறுப்பை,இனவாதத்தை, தீவிரவாதத்தை விதைத்து, சட்டத்தை கையில் எடுத்து, சட்டத்தின் முன் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஒருவருக்கு சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரத்தை வழங்குவது கேலிக்கூத்தானது. 

இவ்வாறான செயலணிகளை நியமித்ததன் ஊடாக, ஜனநாயகக் கோட்பாடுகள் பற்றிய அறிவின்மை எடுத்தியம்புகிறது. இது ஆபத்தான முன்னுதாரணமாகும்.
மேலும்,இந்த நியமனம் நாட்டை ஆள முடியாத ஒரு பலவீனமான, திறமையற்ற தலைவரிடம் இருந்து நமது கவனத்தை திசை திருப்பும் மற்றொரு பயனற்ற முயற்சியாகும்.

அரசாங்கங்களின் பருவகால ஆணைக்குழுக்கல் மற்றும் இத்தகைய செயலணிகளில் நம்பிக்கையீனங்கள் தொடர்ச்சியாக ஏற்படுவது ஒர் ஜனநாயக நாட்டிற்கு ஏற்புடையதல்ல என்பதோடு தேசிய இலக்குகளை அடைந்து கொள்வதற்குமான பயனுறுதி வாய்ந்த கொள்கையாக இது அமையாது என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம் என்றும் அவர்
விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X