Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2021 ஓகஸ்ட் 15 , பி.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடு உத்தியோகபூர்வமாகத் திறக்கப்பட்டதிலிருந்து 21,915 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே நாட்டுக்கு வருகை தந்துள்ளனர் என்றும் அவர்களில் 220 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எனவே, நாடு மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டதால் கொரோனா தொற்று நாட்டில் பரவியது என்று எதிர்க்கட்சிகள் தலைமையிலான சில குழுக்கள் வெளியிடும் அறிக்கைகள் ஆதாரமற்றவை என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 220 சுற்றுலாப் பயணிகளில், 150 பேர் குணமடைந்துள்ளனர், எஞ்சியோர் சுகாதார அதிகாரிகளின் கடுமையான மேற்பார்வையின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதுவரை தொற்றுக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ள 220 சுற்றுலாப் பயணிகளில், எவரும் இலங்கை சமூகத்தில் சேரவில்லை என்றும், உயிர் குமிழி (பயோ பபிள்) முறையால் நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கும் செயல்முறை காரணமாக தொற்றுக்குள்ளளோர் சமூகத்தில் கலக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
38 minute ago
51 minute ago
1 hours ago