Editorial / 2019 ஓகஸ்ட் 31 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த நான்கரை வருடகால ஆட்சியில், நான்கு வருடங்களாக பல மில்லியன் ரூபாய் பணத்தைச் செலவிட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசமைப்பு வல்லுநர்கள் புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கும் கற்கைகளை மேற்கொள்வதற்கும் வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டாலும் அதனூடாக நாட்டுக்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை என்று. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அக்குழு, வட மாகாண மக்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கிய அதேவேளை, தெற்கு வாழ் மக்களிடையே வெறுப்புணர்வைப் பரவச் செய்ததாகவும் என்றும் கூறினார்.
யாழ்ப்பாணத்தில், நேற்று (30) முத்தவெலி நகர சபை மைதானத்தில் இடம்பெற்ற “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின், யாழ். மாவட்ட நிறைவு விழா நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
தற்போது ஜனாதிபதி தேர்தல் பற்றி பரவலாக பேசப்பட்டாலும், இந்தக் குற்றத்தை சரிசெய்து கொள்வதற்கு, தற்போதைய அரசாங்கத்துக்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படுவதாகவும் கூறினார்.
2020ஆம் ஆண்டில், ஆட்சியை கைப்பற்றும் அரசாங்கம், நாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்றால், மேற்குறிப்பிட்ட முக்கிய கடமையை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென்றும் அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு ஒன்றுகூடுமாறு, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிக்கு தான் அழைப்பு விடுப்பதாகவும் கூறினார்.
நாடாளுமன்றம் இந்தப் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டியதுடன், தான் அதற்கான பூரண ஒத்துழைப்பை வழங்கத் தயாராக உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
19ஆவது திருத்தச் சட்டத்தால், அரசமைப்பினூடாக, நாட்டில் அதிகாரமுடைய மூன்று தலைவர்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதியின் அதிகாரத்தில் ஒரு பகுதியை பெற்றுக்கொண்டு, ஒரு பகுதியை மீதம் வைத்துள்ளதாகவும் பிரதமரின் அதிகாரத்தை அதிகரித்து, சபாநாயகருக்கு மென்மேலும் அதிகாரங்களை வழங்கியுள்ளதாகவும் கூறினார்.
மூன்று தலைவர்களுக்கு, ஒரு நாட்டை முன்னெடுத்து செல்ல முடியாதென்றும் அதனால் நாடு சிக்கல்களுக்குள்ளாகுவதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, சட்டவிரோத போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் வேலைத்திட்டத்தின் மற்றுமொரு விசேட வேலைத்திட்டமொன்றை, எதிர்வரும் மாதத்தில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்போவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
யுத்த காலங்களில் பாதுகாப்புத்துறையினர் அபகரித்த காணிகளை மீண்டும் மக்களுக்கு வழங்குவதற்கு, அரசாங்கம் முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், 95 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு மீதமுள்ள காணிகளையும் அடுத்த மாதமளவில் முழுமையாக விடுவிப்பதற்கு தான் பணிப்புரை விடுப்பதாகவும் கூறினார்.
10 minute ago
43 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
43 minute ago
55 minute ago
1 hours ago