2021 ஒக்டோபர் 21, வியாழக்கிழமை

வெளியே வருவதற்கான தடை நீடிப்பு

Freelancer   / 2021 ஜூலை 27 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள வெலே சுதா என்றழைக்கப்படும் கம்பொல விதானலாகே சமந்த குமாரவை பூஸா சிறைச்சாலையில் இருந்து வௌியில் அழைத்து வருவதற்கான இடைக்கால தடையுத்தரவை ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி வரை நீடித்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

வெலே சுதாவின் தாயாரான ஆர்.ஜீ.மாலதியினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த குறித்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக கனேபொல ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே தடையுத்தரவு நீடிக்கப்பட்டது. 

சிறைச்சாலையில் இருந்து தன்னுடைய மகனை வௌியில் அழைத்துச் செல்லும் போது கொலை செய்ய முயற்சி செய்யப்படுவதாக மனுதாரர் தனது மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

அதனால் தன்னுடைய மகனை வெளியில் அழைத்து செல்வதை தடுப்பதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X