2022 நவம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

‘வென்று கொடுத்தது தமிழீழம்’

Niroshini   / 2018 பெப்ரவரி 20 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

“தென்னிலங்கை சிங்கள மக்கள் அப்பாவிகள். அவர்களிடம் பொள்ளான பிராசாங்களை மேற்கொண்டு, மொட்டு அணியினர் வாக்குகளைப் பெற்றுக்கொண்டு வெற்றி பெற்றுள்ளனர்” எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் ​தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், “தமிழீழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி, மொட்டு அணியினர் வாக்குகளைப் பெற்றுக்கொண்டுவிட்டனர்” என்றார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (19) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்று போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “மக்கள் ஆணை மதிக்கப்பட வேண்டும். அந்த ஆணையை வைத்துக்கொண்டு, இந்நாட்டின் சட்டத்தை வேறு திசைக்கு மாற்ற முடியாது. எந்தவொரு தேர்தலிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகளைப் பெற்றுக்கொண்டது இல்லை.

 “கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது, மஹிந்த ராஜபக்ஷ, தமிழீழம் கனவு நனவாகும் எனத் தெரிவித்தார். அரசமைப்பைக் கொண்டு வந்தால் இதற்கு வழிவகுத்துவிடும் என்றார். அதேபோல், அதியுச்ச அதிகார பரவலாக்கம் குறித்தும் பேசினார்.

“இவ்வாறு தவறான முறையில் பிழையான கண்ணோட்டத்தில், தென்னிலைங்கை சிங்கள மக்களிடம் தெரிவித்து, அவர்களது மனதில் தமிழீழம் குறித்து தவறான எண்ணத்தோற்றப்பாட்டை ஏற்படுத்தியுள்ளார். இதைப் பயன்படுத்தியே வாக்குகளையும் பெற்றுக்கொண்டார்.

 “நாட்டைப் பிளவுப்படுத்தும் வகையிலான கருத்துகளை நாம் ஒருபோதும் தெரிவித்ததில்லை. தேர்தல் விஞ்ஞாபனத்திலும் எமது பிரசாரங்களிலும் பிரிவுபடாத நாட்டை முன்னிறுத்தியே, நாம் கருத்து வெளியிட்டோம். “தென்னிலங்கை மக்கள் அப்பாவிகள். அவர்கள் இந்தத் தவறான கருத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

  


dailymirror.lk
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X