2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

‘வாளால் ஜனாதிபதி யாரையும் வெட்டவில்லை’

Niroshini   / 2018 மார்ச் 23 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தவறிழைத்தவர்களுக்கு மக்கள் தீர்ப்பு வழங்கிவிட்டார்கள் எனத் தெரிவித்த ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி, ஜனாதிபதி தனது கையால் எடுக்கப்பட்ட வாளைக்கொண்டு யாரையும் வெட்டவில்லை எனத் தெரிவித்தார்.   

நாடாளுமன்றத்தில், நேற்று (22) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின்போது, மேலதிக வினாவை எழுப்பி உரையாற்றியபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,  

“பதுளையில் உள்ள தமிழ்ப் பாடசாலை அதிபரை, மாகாண முதலமைச்சர் முழங்காலிடவைத்த சம்பவம் தொடர்பில், இது வரை எவ்வித முடிவும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தவறிழைத்தவர்களுக்கு மக்கள் தீர்ப்பு வழங்கிவிட்டனர்” என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .