2021 செப்டெம்பர் 20, திங்கட்கிழமை

அடுத்த வாரம் முதல் நாளாந்தம் நீர் வெட்டு

Editorial   / 2020 ஜனவரி 19 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலவும் வறட்சியுடனான வானிலையால் காலி நகரில் அடுத்த வாரம் முதல் நாளாந்தம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக சபையின் பொதுமுகாமையாளர் கூறியுள்ளார்.

அத்துடன், வறட்சியுடனான வானிலையால், காலி மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கான நீர்விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வறட்சியுடனான வானிலை தொடர்ச்சியாக நிலவும் பட்சத்தில், அநுராதபுரம், கந்தளாய், பண்டாரவளை ஆகிய பகுதிகளுக்கான நீர்விநியோகமும் மட்டுப்படுத்தப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

இதனால், நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .