Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2021 ஒக்டோபர் 18 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளப் பிரச்சினைக்கு சாத்தியமான உச்சபட்ச தீர்வை அரசாங்கம் வழங்கியுள்ளது என்று தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், நாடு பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்றும் தெரிவித்தார்.
அரசாங்கம், மிகவும் கடினமான சூழ்நிலைகளிலும் அதிகபட்ச நிவாரணம் அளித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு மேல் கொடுக்க விரும்பினாலும், தற்போதைய சூழ்நிலையில் இதைத் தாண்டிச் செல்ல முடியாது என்பது அனைவருக்கும் தெரியும் என்றார்.
பல நிலைகளில் வழங்கக்கூடிய அதிகபட்ச தீர்வு இப்போது வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பத்தரமுல்ல, நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்ட விடயங்களை அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .