2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

இரண்டாவது டோஸ் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

Nirosh   / 2021 ஓகஸ்ட் 01 , பி.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்ட்ராசெனிகாவின் இரண்டாவது டோஸை விரைவாக செலுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிலையில், இராணுவம், சுகாதார அதிகாரிகளால் நிர்வகிக்கப்படும் தடுப்பூசி மையங்களூடாக இன்று (01) முதல் மேல் மாகாணத்தில் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டது.

இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில், அஸ்ட்ராசெனிக்காவின் இரண்டாவது டோஸ் நாராஹேன்பிட, வெரஹேர ஆகிய இடங்களில் உள்ள இராணுவ வைத்தியசாலைகளிலும், பெனாகொட இராணுவ முகாமிலும் செலுத்தப்படுகிறது. நாளை மறுதினம் (03) வரையில் இரண்டாவது டோஸைப் பெற்றுக்கொள்ள முடியும்.

18 வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் இரண்டாது டோஸைப் பெற்றுக்கொள்ள முடியுமென இராணுவ வைத்தியசாலையின் தடுப்பு மருத்துவம், மனநல சுகாதார சேவை பணியகத்தின் பிரதி பணிப்பாளர் வைத்திய நிபுணரான கேர்ணல் வைத்தியர் சவீன் கமகே தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் எட்டு இடங்களில் உள்ள 13 வைத்தியசாலைகளிலும், களுத்துறையில் 5 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும், கம்பஹாவில் 15 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும் இவ்வாறு தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .