Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 நவம்பர் 24 , மு.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
கனடாவிற்கு அனுப்புவதாக கூறி தம்மிடம் இருந்து 99 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தினை மோசடி செய்துள்ளார் என பெண்ணொருவருக்கு எதிராக இரு இளைஞர்கள் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் தம்மை கனடாவிற்கு அனுப்புவதாக ஆசை வார்த்தைகள் கூறி பணத்தினை கடந்த ஏப்ரல் மாதம் பெற்றுக்கொண்டதாகவும் , 7 மாதங்கள் கடந்த நிலையில் இதுவரையில் தம்மைவெளிநாடு அனுப்புவதற்கான எந்த ஏற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை,
அந்நிலையில் அவரிடம் நாம் பணத்தினை மீள கேட்ட போது , கொழும்பில் உள்ள முகவர் ஒருவருக்கு தான் பணத்தினை செலுத்தி விட்டதாகவும் , தற்போது அவரது தொலைபேசி துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.
தாம் கொடுத்த பணத்தினை அவரிடமிருந்து மீள பெற்று தர வேண்டும் என கோரியே பொலிஸ் நிலையத்தில் இளைஞர்கள் முறைப்படு செய்துள்ளனர்.
சண்டிலிப்பாய் மற்றும் சங்கானை பகுதிகளை சேர்ந்த இரு இளைஞர்களில் ஒருவர் 55 இலட்ச ரூபாயும் , மற்றையவர் 44 இலட்சத்து 35ஆயிரம் ரூபாயும் குறித்த பெண்ணிடம் கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (a)
22 minute ago
30 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
30 minute ago
51 minute ago