Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 01 , பி.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஓடைக்கரையில்
ஒற்றைக்கால் தவத்தில்
மீண்டும் நாரைகள் தமது
அபிலாஷைகளை
அடைந்துக் கொள்ளும் முனைப்பில்!
வந்து, வந்து தப்பிப் போதலும்,
வராமலே தூர நின்று
அவதானிப்பதுமாய்…..
வரால், வாழை,
பனையான் வகையராக்கள் !
எனினும்,
நாரைகளின் கடுந்தவம்,
கால்கள் வலிப்பெடுத்தும்,
முற்றுப்பெறாமல் இன்னும்!
முகில் முகடு உடைப்பெடுத்து
ஓடை நிரம்பி வழியும் போதும்…
ஓயாமல் இன்னும்?
அரங்கேரப்போகும்
அடுத்தக் கட்ட நடவடிக்கைகளால்…..
சத்தியம், இனி
சத்தியமாய் செத்துவிடும்!
சத்திய சோதனை யின்
பக்கங்களை
பகல்வேஷங்கள்
பகிரங்கமாய் கிழிததுவீசும்!
நரிகள் என்ன நரிகள் ?
நமது கலைமகளின்
நரம்பில்லா நாவுகளின் அசைவில் ….
எல்லாமே பின்வாங்கி ,
பகலவனின் வெம்மையில்
பனிப்படலங்களின் நிலையில்!
-ஏறாவூர் தாஹிர் -
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .