2021 ஒக்டோபர் 28, வியாழக்கிழமை

’ ஊரடங்கை பயன்படுத்தி சொத்துக்களை விற்கிறார்கள்’

Nirosh   / 2021 செப்டெம்பர் 28 , பி.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதாகக் கூறிக்கொண்டு ஆட்சிக்குவந்த ராஜபக்ஷக்கள் தேசிய பாதுகாப்பு, மின்சாரம், தேசிய வளங்களை அமெரிக்காவின் நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். 

நாட்டை கட்டியெழுப்புவதாக கூறி, நாட்டின் அரசமைப்பை மாற்ற அமெரிக்க பிரஜையை பாராளுமன்றத்துக்கு அழைத்து வந்தார்கள். ஆனால் அந்த அமெரிக்க பிரஜை எமது நாட்டு வளங்களை அவரது நாட்டுக்குக் கொண்டு செல்கிறார் என்றார்.

அரசாங்கம் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தைப் பயன்படுத்தி தேசிய சொத்துக்களை, பெறுமதியான வளங்களையும் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தங்களை செய்கிறது எனவும் அவர் கூறினார். 

யுகதனவியை அமெரிக்க நிறுவனத்துக்கு இரவு 12 மணிக்கு வழங்கியுள்ளனர். இந்த ஒப்பந்தத்தில் என்ன உள்ளது என்று எவருக்கும் தெரியாது.   எந்தவொரு நாடு அந்நாட்டின் மின்உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு வழங்குவதில்லை என்றார். 

ஆனால் நாட்டின் பிரதான மின்உற்பத்தி நிலையத்தில் 40 சதவீதத்தை அமெரிக்காவுக்கு வழங்கியுள்ளனர். இது தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் எனவும் அவர் கூறினார். 

தேசிய பாதுகாப்பு என்பது துப்பாக்கியோடு மாத்திரம் தொடர்புடைய விடயமல்ல.  நீர், மின்சாரம் உள்ளிட்ட மக்களின் வாழ்க்கையோடு தொடர்புடைய அனைத்து விடயங்களிலும் தங்கியுள்ளது எனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .