Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Nirosh / 2021 ஓகஸ்ட் 05 , பி.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையிலிருந்து ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு சென்ற வீரர் ஒருவர் தனது ஸ்பைக் சப்பாத்தை இலங்கையிலேயே வைத்துவிட்டு சென்றுள்ளதாகத் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் இன்றைய (05) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய நாமல், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை பெற விளையாட்டு வீரர்களை ஒவ்வொரு நாடுகளும் 10 - 15 வருடங்களுக்கு முன்பிலிருந்தே தயார்ப்படுத்தி வருவதாகவும் கூறினார்.
ஆனால், இலங்கையில் இந்த வேலைத்திட்டங்கள் 6 மாதங்களுக்கு ஒருமுறை மாறி வருகிறது. எவ்வாறாயினும் 2031ஆம் ஆண்டுவரையிலான வேலைத்திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
“ஒலிம்பிக் விளையாட்டில் பங்குபற்றும் வீரர்கள் வெற்றிபெற வேண்டும் என்கிற மனநிலையோடே செல்ல வேண்டும். ஆனால் இலங்கையிலிருந்து இம்முறை சென்ற விளையாட்டு வீரர் ஒருவர் தனது ஸ்பைக் சப்பாத்தை இலங்கையிலேயே வைத்துவிட்டு ஜப்பான் சென்றுள்ளர்.
விளையாட்டு வீரர்கள் சப்பாத்தை எடுத்துச் செல்ல வேண்டுமென விளையாட்டு துறை அமைச்சரால் கூற முடியாது.“ எனவும் தெரிவித்தார்.
ஒலிம்பிக் போட்டியில் இலங்கை வீராங்கனை ஒருவர் அணிந்திருந்த உடை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட சர்சையான கருத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
8 minute ago
27 minute ago
35 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
27 minute ago
35 minute ago
45 minute ago