2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

சஹ்ரானின் பாசறையில் பங்கேற்ற இளைஞன் கைது

Ilango Bharathy   / 2021 டிசெம்பர் 04 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுடன் தொடர்பை பேணிய குற்றச்சாட்டின் கீழ், மற்றுமோர் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாவனெல்ல – ஹிங்குல பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்த பொலிஸார், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பிலேயே அவர், கைது செய்யப்பட்டுள்ளார்.

சஹ்ரான் ஹாசிமினால் ஹம்பாந்தோட்டையில் நடத்திச் செல்லப்பட்ட பயிற்சி முகாமில் பயிற்சிகளை சந்தேகநபர் பெற்றுள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ, சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .