Freelancer / 2021 ஓகஸ்ட் 01 , பி.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் நகல்கள், நாளை (02) முதல் ஒன்லைனில் வழங்கப்படும் என்று தலைமைப் பதிவாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த சான்றிதழ்களின் நகல்களை பெறுவதற்கு திறன்பேசிகள் மற்றும் கணினிகளைப் பயன்படுத்தி ஒன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் விசா மற்றும் மாஸ்டர் அட்டைகளைப் பயன்படுத்தி பணம் செலுத்தலாம் என்றும் அத்திணைக்களம் அறிவித்துள்ளது.
சான்றிதழ்களை பதிவுத்தபால் மூலமாக உங்கள் வீட்டு அனுப்பமுடியும் அல்லது அருகில் உள்ள பிரதேச செயலகத்துக்குச் சென்று பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சான்றிதழ்களை https://online.ebmd.rgd.gov.lk/ என்ற இணையதளத்தில் பெறலாம் மற்றும் தேவையான தகவலை http://www.rgd.gov.lk/ என்ற இணையதளம் மற்றும்
011 2889518 என்ற தொலைபேசி இலக்கத்தில் இருந்து பெறலாம்.
பாதுகாப்பு அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் தலைமைப் பதிவாளர் திணைக்களம் ஆகியவை இத்திட்டத்தை 'எளிய, வசதியான, திறமையான பொது சேவை அதிகாரமளித்தல்' திட்டத்தின் கீழ் செழிப்பு தொலைநோக்கு கொள்கை அறிக்கையில் தொடங்கியுள்ளன.
8 hours ago
26 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
26 Oct 2025