2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

சாந்த சிசிர குமார எம்.பிக்கு விளக்கமறியல்

Editorial   / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த சிசிர குமாரவை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  சிலாபம் மேல் நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டுள்ளது.

பிணை நிபந்தனைகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

2004 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக கூட்டமொன்றை நடத்தி, துப்பாக்கியொன்றை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட சாந்த சிசிர குமார, 2011 ஆம் ஆண்டு பிணையி விடுவிக்கப்பட்டிருந்தார்.

ஞாயிற்றுக்கிழமைகளில் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாக வேண்டும் என்ற நிபந்தனையில் சிலாபம் மேல் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியிருந்தது.

இந்த நிலையில், 2013 ஆம் ஆண்டு ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு பிணை நிபந்தனைகள் தளர்த்தப்பட்டது.

எனினும், பிணை நிபந்தனைகளுக்கு அமைய அவர் செயற்படவில்லை என்பதால், பிணை உத்தரவை இரத்து செய்த சிலாபம் மேல் நீதிமன்றம், சாந்த சிசிர குமாரவை கைது செய்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .