2021 செப்டெம்பர் 19, ஞாயிற்றுக்கிழமை

’அரிசி விலை குறைக்கப்படும்’

Freelancer   / 2021 ஜூலை 26 , பி.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பா மற்றும் கீரி சம்பா ஆகியவற்றின் விலைகள் அடுத்த வாரம் முதல் 50 தொடக்கம் 75 ரூபாய் வரை குறைக்கப்படும் என்று விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.

பத்தரமுல்லை விவசாய அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்தார்.

அதிக விலைக்கு அரிசி விற்கப்பட்டால் ஒரு இலட்சம் ரூபாய் தண்டப்பணம் அறவிடும் சட்ட வரைவை அடுத்த வாரம், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அரிசி விலையை நிர்ணயம் செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் சுமார் 80 சதவீத மக்கள் உட்கொள்ளும் நாட்டு அரிசியின் விலை 100 ரூபாயை விட குறைக்கப்படும் என்றும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .