J.A. George / 2021 ஜூன் 21 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளை மறுதினம் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முற்பகல் 10 மணியளவில், நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பித்த பின்னர், அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார் என அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு, அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் தெரிவுசெய்யப்பட்டார்.
அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தேர்தல்கள் ஆணைக்குழுவால் கடந்த வார இறுதியில் வெளியிடப்பட்டிருந்தது.
7 hours ago
06 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
06 Mar 2026