2021 ஒக்டோபர் 22, வெள்ளிக்கிழமை

அதிக விலைக்கு விற்றால் 1 இலட்சம் ரூபாய் அபராதம்

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 20 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக விதிக்கப்படும் அபராதம் 100,000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. பாராளுமன்றத்தில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைத் (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம்22

ஆம் திகதியன்று இடம்பெறவுள்ளது. இதன்போதே இத்திருத்தம் முன்வைக்கப்படவுள்ளது. பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தை எதிர்வரும் 22ஆம் திகதி நடத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை கூடிய பாராளுமன்ற
அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அந்த திருத்தத்தை கூட்டுறவு சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன முன்வைப்பார். இவ்வாரம், பாராளுமன்றம் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் மட்டு​மே நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X