2022 ஜனவரி 21, வெள்ளிக்கிழமை

’மலையக மக்களையும் உள்வாங்க வேண்டும்’

Nirosh   / 2021 டிசெம்பர் 01 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

தேசிய சுகாதார முறையை பெருந்தோட்டத்துக்கும் விஸ்தரிக்க வேண்டும் என சபையில் கோரிக்கை விடுத்த பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், மனிதாபிமான முறையிலாவது இதனை விரைந்து செய்ய வேண்டும் என அரசாங்கத்திடம் வலியுறுத்தினார். 

சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான  குழுநிலை விவாதத்தில் நேற்று (30) கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய வடிவேல் சுரேஷ், பெருந்தோட்ட வைத்தியசாலைகள் மாகாணசபைகளுக்குக் கீழ் வருவதால், தேசிய சுகாதார முறைக்குள் அவைகள் உள்வாங்கப்படுவதில்லை.

இதனால் இலவச சுகாதார முறை மலைய மக்களை சென்றவடைவதில்லை. பெருந்தோட்ட வைத்தியசாலைகள் கட்டம் கட்டமாக அரச வைத்தியசாலைகளாக உள்வாங்கி அபிவிருத்தி செய்வோம் என அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியும் ஏன் அதனை நடைமுறைப்படுத்தப்படவில்லை என வினவினார்?

சுகாதார அமைச்சில் உள்ள பெருந்தோட்டப் பிரிவு இயங்குகிறதா? இல்லையா? எனவும் கேள்வி எழுப்பிய வடிவேல் சுரேஸ், பெருந்தோட்டத்தில் உள்ள பல வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் இல்லை எனவும் தெரிவித்தார். 

தேசிய சுகாதார வைத்திய முறையை மலையகப் பிரதேசங்களுக்கும் விஸ்தரிக்க வேண்டும் என கூறிய, பெருந்தோட்ட வைத்தியசாலைகளின் குறைப்பாடுகளையும் சுட்டிக்காட்டி சபையில் உரையாற்றினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X