Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 மே 18 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
விடுதலைப் புலிகள் அமைப்பினர் தாக்குதல் நடத்துவதாகத் தெரிவித்து, அம்பாறை- நவகிரியாவ காட்டிலிருந்து கூச்சலிட்டவாறு ஒடி வந்து கிராமவாசிகளை பயமுறுத்திய ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பக்கிஎல்ல பொலிஸ்ஸார் தெரிவித்துள்ளனர்.
“ புலிகள் எம்மை வெட்டுகின்றனர்” என கூக்குரலிட்டவாறு சிலர் ஒடி வருவதை அவதானித்த மின் வேலியைப் பாதுகாக்கும் கடமையில் ஈடுபட்டிருந்த சிவில் பாதுகாப்பு தரப்பினரும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் பக்கிஎல்ல பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
அத்துடன் 119 என்ற அவசர பிரிவினருக்கும் அறிவித்துள்ளனர்.
இதற்கமைய, அம்பாறை மற்றும் அரன்தலாவ பொலிஸ் விசேட பிரிவினர், இராணுவத்தினர், பொலிஸார் இணைந்து அப்பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது சந்தேகநபர்கள் வருகைத் தந்த மோட்டார் சைக்கிள், 3 சைக்கிள்கள் மற்றும் ஓட்டோவொன்று என்பன அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் சந்தேகநபர்கள் 7 பேரும் திவுலான காட்டுப் பகுதியில் மறைந்திருந்த நிலையில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
31 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
1 hours ago