2022 ஓகஸ்ட் 15, திங்கட்கிழமை

நலமாக உள்ளார் மஹிந்த: நாமல் எம்.பி அறிவிப்பு

Editorial   / 2022 ஜூலை 04 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவின் உடல்நிலையில் எவ்விதமான பாதிப்புகளும் இல்லை என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரும், மஹிந்தவின் புதல்வர்களில் ஒருவருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவர், சுகயீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்கள் உட்பட முக்கிய செய்தி நிறுவனங்களும் செய்திகளை வெளியிட்டுள்ளன. அந்த செய்திகளில் எவ்விதமான உண்மைத்தன்மையும் இல்லை. செய்திகளை உறுதிப்படுத்திக்கொண்டு வெளியிடவேண்டும் என்றும் நாமல் ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார்.

நாட்டின் தற்போதைய நிலைமையில், போலியான செய்திகளை உருவாக்குதல், மக்களிடத்தில் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையிலான செய்திகளை உருவாக்குதல் அவ்வளவுக்கு நல்லதல்ல. நாட்டின் மக்களை திசைதிருப்புவதற்கு கோபத்தை ஏற்படுத்துவதற்கு இன்றேல் தூண்டும் வகையில் செய்திகளை பரப்புவதை தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

மஹிந்த ராஜபக்ஷ, சுகயீனமடைந்து தனியார் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப்பெற்று வருகின்றார் என, ஜூன் 30 ஆம் திகதிமுதல் செய்திகள் வெளிவருகின்றன. அந்த செய்தியை முன்னாள் பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .