2023 செப்டெம்பர் 27, புதன்கிழமை

ஜூலையில் மாற்றம்

Freelancer   / 2023 ஜூன் 01 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள பஸ் கட்டண மீளாய்வின் போது பஸ் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இம்முறை மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை திருத்தத்தில் டீசல் விலையில் குறைப்பு இல்லை என்றாலும் கடந்த மாதம் டீசல் விலை குறைக்கப்பட்டதை கருத்தில் கொண்டு பஸ் கட்டணத்தை திருத்த தயாராக உள்ளதாக அவர் கூறினார்.

கடந்த மாதம் 15 ரூபாவினால் டீசல் விலை குறைக்கப்பட்டதாகவும், ஜூலை 1 ஆம் திகதி பஸ் கட்டண மீளாய்வு செய்யும் போது அதற்கான பலனை வழங்க அரசாங்கம் வற்புறுத்துவதாகவும் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் பொருட்களின் விலைகள், உதிரி பாகங்களின் விலைகள் மற்றும் இதர பொருட்களின் விலைகள் கணக்கிடப்பட்டு, ஜூலை 1-ம் திகதி பேருந்து கட்டணங்கள் திருத்தம் செய்யப்படும் என்றும் அவர் கூறினார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .