Freelancer / 2022 ஜூலை 01 , பி.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
கலென்பிந்துணுவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து வசதிகள் இன்மையால் லொறியில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது லொறியின் பின்புற பகுதி விழுந்ததில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.
சம்பவத்தில் 37 மாணவர்கள் லொறியில் பயணித்துள்ளதுடன் அவர்களில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
பிரதேச வாசிகள் காயமடைந்த மாணவர்களை கலென்பிந்துணுவெவ வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன், மூன்று மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதில், மாணவர் ஒருவரின் கால் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கலென்பிந்துணுவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.(R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .