2021 ஒக்டோபர் 28, வியாழக்கிழமை

போதைக்கு பணம் தர மறுத்த மனைவி மீது தாக்குதல்

Nirosh   / 2021 செப்டெம்பர் 28 , பி.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெரோயின் போதைப்பொருளை வாங்குவதற்கு பணம் தர மறுத்த தனது கர்ப்பிணி மனைவியை காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி, அவரது உடலில் சுடு தண்ணீரை ஊற்றிய கணவனை பொலிஸார் கைது செய்துள்ளதாக கிரிபத்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலில் மனைவியின் கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளதால், கொழும்பு கண் சிகிச்சை வைத்தியசாலையில் மனைவி சிகிச்சைப் பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

கைது செய்யப்பட்டுள்ள கணவன் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகவும், கணவனுக்கு 23 வயது. மனைவிக்கு 20 வயது எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 
இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .