2021 செப்டெம்பர் 19, ஞாயிற்றுக்கிழமை

ஆர்.பிரேமதாஸ மைதான ஊடக மையத்துக்கு பூட்டு

Freelancer   / 2021 ஜூலை 26 , பி.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் ஊழியர் ஒருவர், கொரோனா தொற்றுக்குள்ளாகியதையடுத்து, கொழும்பு ஆர். பிரேமதாஸ கிரிக்கெட் மைதானத்திலுள்ள ஊடக மையத்தில் பணியாற்றிய 30 பேருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டிக்காக ஊடக மையத்தை நாளை (27) திறப்பது தொடர்பான முடிவு  பீ.சீ.ஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

ஊடக மையத்தில் பணிபுரிந்த 30 பேர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

நேற்று (25)  நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதலாவது இருபதுக்குக்கு 20 போட்டியில் செய்தி கேரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்கள் ஒன்றுகூடியிருந்த ஊடக மையத்தின் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானதையடுத்து ஊடக மையம் , உடனடியாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .