2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

வாகன விபத்துக்களால் நேற்று 10 பேர் பலி

J.A. George   / 2021 ஜூலை 28 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நேற்று (27) இடம்பெற்ற வாகன விபத்துக்களினால் 10 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி  பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அவர்களில் 6 பேர் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் என அவர் கூறினார்.

அத்துடன், மூன்று பாதசாரிகளும், முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவரும் உயிரிழந்ததாக குறிப்பிட்டார்.

இதேவேளை, நாட்டில் அதிகளவில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி விபத்துக்கள் பதிவாகின்றதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, சாரதிகள் வீதியில் பயணிக்கும் போது, மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அவர் அறிவுறுத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .