2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

ரிஷாட் வீட்டில் மற்றொரு பெண்ணுக்கும் பாதிப்பு

Nirosh   / 2021 ஓகஸ்ட் 01 , பி.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் 2010ஆம் ஆண்டு முதல் வீட்டு வேலை செய்து வந்த 11 பெண்களில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

ரிஷாட் வீட்டில் வேலை செய்துவந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த 16 வயது சிறுமி தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த விசாரணைகளிலேயே அந்த வீட்டில் பணிப்புரிந்த மேலும் மூவர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

உயிரிழந்த மூவரில் இருவர் புற்றுநோய் காரணமாகவும், மற்றொருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

2010 ஆண்டு முதல் இதுவரையில் ரிஷாட் வீட்டில் 11 பெண்கள் வேலை செய்து வந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவிப்பதோடு, இவர்களிடம் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் உயிரிழந்த சிறுமியை ரிஷாட் வீட்டுக்கு அழைத்துவந்த தரகரே மேற்குறித்த 11 பெண்களையும் ரிஷாட் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளாரென பொலிஸார் முன்பு கூறியிருந்தனர்.

ரிஷாட் வீட்டில் வீட்டு வேலை செய்துவந்த மற்றொரு பெண்ணும் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார் என மேல்மாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .