2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

டெல்டா வைரஸை கண்டுபிடிக்க புதிய திட்டம்

Freelancer   / 2021 ஜூன் 19 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸின் புதிய விகாரமான டெல்டா பரவியுள்ளதா என்பதை அறிய மற்றொரு பரிசோதனைத் திட்டம் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் மருத்துவர் சந்திம ஜீவந்தர இந்த தகவலை ஊடகங்களுக்கு தெரிவித்தார்

பரிசோதனைகளுக்காக இலங்கையில் இதுவரை பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை மாற்றி ஆக்ஸ்போர்டு நானோ தொழில்நுட்பம் முதல் முறையாக பயன்படுத்தப்பட உள்ளது.

நானோ தொழில்நுட்பம் முன்பு பயன்படுத்திய தொழில்நுட்பத்தை விட மிகவும் திறமையானது என கூறினார்.

நானோ தொழில்நுட்பத்திற்கு தேவையான உபகரணங்கள் சமீபத்தில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் நடத்திய முந்தைய மரபணு பகுப்பாய்வு சோதனைகளின் போது கொழும்பில் உள்ள தொமட்டகொட பகுதியில் ஆபத்தான டெல்டா வைரஸால்  பாதிக்கப்பட்ட ஐந்து பேரை அடையாளம் காண முடிந்தது.

பாதிக்கப்பட்ட ஐந்து நபர்கள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில், ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறைக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டமையால் அப்பகுதியை தனிமைப்படுத்தவும் தேவையான சுகாதார நடவடிக்கைகளை எடுக்கவும் முடிந்தது என்றார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .