J.A. George / 2021 ஜூன் 17 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இணைய வழியில் மதுபானங்களை விநியோகிப்பது சட்டவிரோதமானது என, இலங்கையின் மதுபான அனுமதிப்பத்திர உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் ஊடாக மதுபானங்களை கொள்வனவு செய்ய முடியாத 21 வயதுக்கு குறைந்தவர்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் போன்றவர்கள் மதுபானத்தை கொள்வனவு செய்யும் நிலைமை ஏற்படும் என, அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று(17) செய்தியாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அந்த சங்கத்தின் தலைவர் அஜித் உடுகம இதனை கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கைக்கு எதிரான சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள தமது சங்கம் எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிபிட்டுள்ளார்.
9 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
9 hours ago