2023 மார்ச் 30, வியாழக்கிழமை

லிற்றோ காஸ் விலை அதிகரிப்பு

Editorial   / 2023 பெப்ரவரி 02 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

லிற்றோ காஸ் சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளது. 12.5 கி​லோகிராம் நிறையைக் கொண்ட காஸ் சிலிண்டரின் விலை 700 ரூபாய்க்கும்  800 ரூபாய்க்கும் இடையில் அதிகரிக்கப்படவுள்ளது என லிற்றோ நிறுவனத்தின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறு விலை அதிகரிக்குமாயின் 5 கிலோகிராம் நிறையைக் கொண்ட சிலிண்டரின் விலை 200 ரூபாய்க்கும் 300 ரூபாய்க்கும் இடைப்பட்ட விலையில் அதிகரிக்கும் 2.3 கிலோகிராம் சிறையைக் கொண்ட சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த விலை அதிகரிப்பானது எதிர்வரும் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளது என அறியமுடிகின்றது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .