2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

‘உர மாபியாக்களை அழிப்பது கஷ்டம்’

Nirosh   / 2021 ஜூன் 14 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சேஹ்ன் செனவிரத்ன)

உலகம் பூராகவும் உர மாபியாக்கள் செயற்படுவதாகவும்  வருடாந்தம் இதுதொடர்பில் 100 மில்லியன் கொடுக்கல் வாங்கல் எமது நாட்டிலும் இடம்பெறுவதாகத் தெரிவித்த  விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, இந்த மாபியாக்களை அழிப்பது இலகுவான விடயம் அல்ல என்றார்.

மத்திய மாகாண கொரோனா ஒழிப்பு செயற்குழு கூட்டத்தில் நேற்று முன்தினம் (12) கலந்துகொண்ட போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், உற்பத்திக்கு தேவையான இரசாயன உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், விவசாயிகள் தேவையற்ற வகையில் உரத்தைக் கொள்வனவு செய்யப் போவதால், சில பிரச்சினைகள் தோன்றியுள்ளதுடன், இலங்கையில் 76 சதவீத விவசாயிகளுக்கு உரம் வழங்கி நிறைவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

உரப் பற்றாக்குறை தொடர்பில் சில எதிர்ப்பு நடவடிக்கைகளை பார்க்க முடிந்ததாகவும் எனினும் இலங்கையில் எந்தவொரு விவசாயியும் தமக்கு இரசாயன உரம் தேவையென தெரிவித்து, எவ்வித எதிர்ப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்றார்.இலங்கைத் தேயிலையானது உலக சந்தையில் நான்காவது இடத்துக்கு வீழ்ச்சியடைந்துள்ளதென தெரிவித்த அமைச்சர், இது இரசாயன உரத்தால் ஏற்பட்டதென்று, எவராவது காட்டுவதற்கு முயற்சித்தார்களாயின் அதில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் தற்போதும் தேயிலை உற்பத்திக்கு இரசாயன உரமே விநியோகிக்கப்படுகிறதென்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .