2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

இரு நாடுகளின் உறவில் பாதிப்பு இல்லை

Freelancer   / 2021 டிசெம்பர் 06 , பி.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சியால்கோட் படுகொலை இரு நாடுகளின் சுமுக உறவுகளில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என, இலங்கை உயர்ஸ்தானிகர் மொஹான் விஜய் விக்ரம உறுதியளித்துள்ளார்.

பாகிஸ்தானும் இலங்கையும் நட்புறவு கொண்ட நாடுகளாகவே இருக்கும். இச்சம்பவம் எமது உறவுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என நான் உறுதியளிக்கிறேன் என இலங்கை உயர்ஸ்தானிகர், இன்று (06) தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உயர்ஸ்தானிகர் பாகிஸ்தான் அரசாங்கத்தின் ஆதரவைப் பாராட்டியதுடன், பாகிஸ்தான் மக்களின் அனுதாபங்களுக்கும் இரங்கலுக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் அரசாங்கத்தின் நடவடிக்கைகளைப் பாராட்டிய அவர், சியால்கோட்டில் சம்பவம் நடந்த வெள்ளிக்கிழமை முதல் ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க பாகிஸ்தான் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று நான் நம்புகிறேன். இது ஒரு கொலை. இந்த சம்பவத்துக்கும் பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதில் இலங்கை அரசு உறுதியாக உள்ளது. .பாகிஸ்தான் உடனடி நடவடிக்கை எடுத்திருப்பதை நாங்கள் பார்த்தோம் என்று அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .