2023 பெப்ரவரி 02, வியாழக்கிழமை

நிதி வசதிகளை பெற இலங்கைக்கு அங்கீகாரம்

Freelancer   / 2022 டிசெம்பர் 07 , மு.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொருளாதாரத்தை நிலையாக பேணுவதற்கும் வாழ்க்கைத் தரத்தினை பாதுகாப்பதற்கும் உதவி செய்வது தொடர்பில் சர்வதேச அபிவிருத்தி சங்கத்தின் நிவாரண  நிதி வசதிகளை பெறுவதற்கான இலங்கையின்  தகுதியை  உலக வங்கி அங்கீகரித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

நாட்டிற்கு வருகை தந்துள்ள உலக வங்கியின் உப தலைவர்  மார்ட்டின் ரைசர் உள்ளிட்ட கடன் வழங்கும் தரப்பினருடன் நேற்று    ஜனாதிபதி  கொழும்பில் நீண்ட  பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பலதரப்பு நிதி நிறுவனங்களின் ஆதரவுடன் ஒருங்கிணைக்கப்பட்ட உதவித் திட்டம் இலங்கைக்கு தேவை என இதன்போது  தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .