2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

நாளை வருகிறது 1.6.மில். சினோஃபாம் தடுப்பூசி

Freelancer   / 2021 ஜூலை 26 , பி.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீன அரசாங்கத்தால் அன்பளிப்புச் செய்யப்பட்ட 1.6 மில்லியன் டோஸ் சினோஃபாம் தடுப்பூசிகள் மற்றும் 2.6 மில்லியன் சிரிஞ்ச்கள் என்பன, நாளை (27) நாட்டுக்குக் கிடைக்கவுள்ளதாக ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமான தெரிவித்தார்.

இது, சீன அரசாங்கத்தால் ஒரு தடவையில் வழங்கப்பட்ட சினோஃபாம் கொரோனா தடுப்பூசியின் மிகப்பெரிய ஒற்றை டோஸ் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அதன்படி, சீன அரசு இதுவரை இலங்கைக்கு வழங்கிய சினோபாம் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 27 லட்சமாக அதிகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த தடுப்பூசிகளை இராஜாங்க அமைச்சர்  சன்ன ஜயசுமான மற்றும் அதிகாரிகள் குழுவினர், 
கட்டுநாயக்க விமான நிலையத்தில்  நாளை காலை பெறவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .