2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

“நாடு முழுதும் சிறப்பு இராணுவ புலனாய்வுக் குழு களமிறக்கம்”

Freelancer   / 2021 ஜூன் 12 , பி.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி பயணிக்கும் நபர்களின் தகவல்களைத் தேடுவதற்காக சிறப்பு இராணுவ புலனாய்வு குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்கள் மீறப்படும் இடங்கள் குறித்து  பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டியது இந்த குழுக்களின் பொறுப்பு என்றும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.

பயணக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட காலக்கட்டத்தில் பலரின் செயற்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாகவும், எனினும் ஒருசிலரது நடவடிக்கை வருந்தத்தக்கது என்றும் குறிப்பிட்டார்.

அத்தியாவசிய தேவைகளைத் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அவர் அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுத்தார்.

மேலும் நாட்டை மீண்டும் திறக்கும் முடிவு மக்களின் செயற்பாடுகளால் மாற்றப்பட்டது என்றார்.

மக்கள் சரியான முறையில் செயற்பட்டால், நாட்டை உரிய திகதியில் திறக்க முடியும் என்றார். - R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .