2021 செப்டெம்பர் 20, திங்கட்கிழமை

சு.க- ஜனாதிபதி பேச்சு ஒத்திவைப்பு

Ilango Bharathy   / 2021 ஜூலை 22 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கும் இடையில், நேற்று (21) நடைபெறுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த பேச்சுவார்த்தை, எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, தலைமையிலான அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் இடையிலே​யே இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவிருந்தது.

அரசாங்கத்தின் பிரதான பங்காளியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரை, அரசாங்கத் தரப்பினர், ஓரவஞ்சனையுடன் நடத்துவதாக, குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையிலேயே, பேச்சுவார்த்தைக்கு திகதி குறிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .