2021 ஜூலை 27, செவ்வாய்க்கிழமை

மீண்டும் பொலிஸ் பதிவு

Shanmugan Murugavel   / 2015 செப்டெம்பர் 30 , மு.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் உள்ள சகல பொலிஸ் பிரிவுகளுக்கும் உட்பட்ட பகுதிகளில் தற்காலிகமாகத் தங்கியிருப்பவர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகளை பொலிஸ் திணைக்களம் ஆரம்பிக்கவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

சகல பொலிஸ் பிரிவுகளிலும் தற்காலிகமாக தங்கியிருக்கும் தொழிலாளர்கள் மற்றும் தற்காலிக வசிப்பாளர்கள் பதிவுக்கு உட்படுத்தப்பட உள்ளனர்.

கடந்த சில நாட்களில் இடம்பெற்ற பாரிய பல்வேறான குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள், வெளியிலிருந்து வந்தவர்களே என்று தெரியவருகின்றது. இதனையடுத்தே இந்தப் பதிவை மேற்கொள்வதற்கு பொலிஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.

எனினும் இது தொடர்பாக வினவப்பட்டபோது, இந்த பொலிஸ் பதிவு தொடர்பில், இன்று புதன்கிழமை (30) உத்தியோகபூர்வ அறிக்கை விடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பதில் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த ஜயக்கொடி, தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

பயங்கரவாத அச்சுறுத்தல் எனத் தெரிவித்து தலைநகரில் தங்கியிருந்த வடக்கு, கிழக்கு மற்றும் நாட்டின் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த தமிழர்கள் முன்னர் பதியப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .