2021 செப்டெம்பர் 20, திங்கட்கிழமை

18 சிறார் நீதிமன்றங்களை அமைக்க ஏற்பாடு

Freelancer   / 2021 ஜூலை 21 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுவர்களுக்கான 18 சிறார் நீதிமன்றங்களை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பிரதித் தலைவர் சுஜாதா அலஹப்பெரும தெரிவித்தார்.

நாட்டின் ஒன்பது மாகாணங்களை உள்ளடக்கிய சிறுவர் நீதவான் நீதிமன்றங்கள் ஒன்பதையும் மற்றும்  சிறுவர் மேல் நீதிமன்றங்கள் ஒன்பதையும் ஸ்தபிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

'சிறுவர் துஷ்பிரயோகம், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை மற்றும் ஊடகங்களின் சமூக பாதிப்பு' குறித்து அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போது கொழும்பு, பத்தரமுல்லை மற்றும் யாழ்ப்பாணத்தில் இரண்டு சிறுவர் நீதவான் நீதிமன்றங்கள் மட்டுமே உள்ளன என்று தெரிவித்த அவர்,  அவை போதுமானதாக இல்லை என்றும் அந்த நீதிமன்றங்களில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் இருப்பதால் வழக்குகளை ஒத்திவைக்கும் போக்கு காணப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .