2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

உலகத் தமிழர் பண்பாட்டு மாநாட்டில் த.தே.கூ.எம்.பி.க்கள்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 06 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(வ.சக்திவேல்)

எதிர்வரும் 11ஆம் திகதி ஜேர்மனியில் நடைபெறவிருக்கும் உலகத் தமிழர் பண்பாட்டு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக எதிர்வரும் 9ஆம் திகதி இலங்கையிலிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறப்படவுள்லனர்.

தமிழர் ஒன்றியத்தின் பேரவையினால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள உலகப் பண்பாட்டு பேரவையில் சிறப்புரையாற்றுவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, பா.அரியநேத்திரன், சிவஞானம் சிரிதரன் ஆகியோரே செல்லவுள்ளனர்.

1947ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பேரவையில் இம்முறை 42 நாடுகளைச் சேர்ந்த புத்திஜீவிகள், அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .